நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: பளபளக்கும் தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து... இளசுகளை மயக்கும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்..!
 

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ.வின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: மாதவன் பட இயக்குனர் சிகிச்சை பலனின்றி மரணம் என பரவிய வதந்தி..! அதிர்ச்சியில் இருந்து மீண்ட திரையுலகினர்!
 

இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். பின்னர், திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மக்களின் பிரதிநியாக  மக்களோடு மக்களாக சிகிச்சை பெறுவதாக தெரிவித்தார் . மேலும் அரசு மருத்துவர்கள் மற்றும், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும்... உயர்ந்த மனப்பான்மையோடும், அர்பணிப்போடும் வேலை செய்வதாக பெருமையாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில், நடிகரும் எம்.எல்.ஏ வுமானகருணாஸ்  வீடு திரும்பிய தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து,  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.