karthisubbaraj assistant turn to director

நளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் "நட்புனா என்னன்னு தெரியுமா". இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் "நெருப்புடா" அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த். 

"நட்புனா என்னன்னு தெரியுமா" திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தனது "லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பில் தன்னுடைய நான்காவது பட தயாரிப்பை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். 

பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதாநாயகனாக மலையாள திரையுலக புகழ் ஆதில் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற "Dance 4 Dance" நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாகச் சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கின்றார். 

மேலும் இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.