Karthigai Deepam 2 Update : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் இணைந்து எத்தனையோ தில்லாலங்கடி வேலை பார்த்தும் கூட கார்த்திக் அதையெல்லாம் முறியடித்து ஜெயித்து வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் 2
கார்த்திகை தீபம் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் புதிய புதிய டுவிஸ்டுகளுடன் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் சிவனாண்டி மற்றும் முத்துவேல் பிரச்சனை செய்தால் மறுபக்கம் மாயா, இன்னொரு பக்கம் காளியம்மாள் என்று திரும்பிய பக்கமெல்லாம் கன்னிவெடி என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரும் பிரச்சனை கொடுக்க கார்த்திக் அதிலிருந்து தப்பித்து தனது குடும்பத்தையும் பாதுகாத்து வருகிறார்.
விஜய்க்கு டக்குனு கோபம் வந்துடும்..! மனம் திறந்த உயிர் நண்பன் சஞ்சீவ்!
ஆனால், டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் ரேவதியை மாயா துப்பாக்கியால் சுட்ட நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு திரும்ப வந்தார். அப்போதும் கூட மாயா அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான் கான்ஸ்டபிள் மறைந்து கிட்டத்தட்ட ஒரு மாசத்திற்கு மேல் ஆகும் நிலையில், இப்போது அவரது போனை கண்டுபிடித்துள்ள சாமுண்டீஸ்வரி அதனை அவரது பேத்தியிடம் கொடுக்காமல் சர்வீஸ் கடையில் கொடுத்துள்ளார்.
ஆனால், போன் சரியாக 3 நாட்கள் ஆகும் என்று கடைக்காரர் சொல்ல, அவரும் சரி என்று சென்றுவிட்டார். மருமகன் மீது சந்தேகமடைந்த சாமுண்டிஸ்வரி உண்மையில் ராஜா சேதுபதியின் பேரன் யார் என்று கண்டுபிடிக்க உளவாளியின் உதவியை நாடினார். இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் இப்போது 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதில் ஏற்கனவே கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கார்த்திக்கின் அம்மாவின் இறப்பின் காரணமாக நின்றது. இதைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரப்படுகிறது. கூடிய விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சன்முகத்தின் போனை வைத்து உண்மையை கண்டுபிடித்தால் சீரியல் கிட்டத்தட்ட பாதி கிணற்றை கடந்துவிடும்.
