இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி, பிரபல ஓடிடி தளத்தில், மொத்தம் 17 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ்... இயக்கி வரும் 'சியான் 60 ' படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை வெளியிட்டுள்ளார். 

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி, பிரபல ஓடிடி தளத்தில், மொத்தம் 17 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ்... இயக்கி வரும் 'சியான் 60 ' படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் திரையுலகைள வாரிசு நடிகர்களாக அறிமுகமாக உள்ள இளம் நடிகர்கள் அவர்களின் தந்தையுடன் சேர்ந்து நடிப்பது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை, சிபி - சத்யராஜ், சிம்பு - டி.ராஜேந்தர், கெளதம் - கார்த்திக், அதர்வா - முரளி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். இவர்களை தொடர்ந்து, விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் ஆகியோர் ஒன்றாக இணைந்து, இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்கள்.

 மேலும் செய்திகள்: திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன் ஆர்யா மனைவி சாயிஷா எப்படி இருக்காங்க பாருங்க! ரேர் போட்டோஸ்..!

விக்ரமின் 60 ஆவது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தலை தூங்கியதால், படப்பிடிப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில்... 'சியான் 60 ' படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் செய்திகள்: துணை நடிகையின் பாலியல் புகார்... முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஊழியர்களிடம் விசாரணை!

 மேலும் செய்திகள்: 3 நொடியில் காதலில் விழுந்து விட்டேன்... தன் செல்லத்தை அறிமுகம் செய்து இளம் நெஞ்சங்களை ஏங்க விட்ட ராஷ்மிகா!

மீண்டும் படப்பிடிப்பு துவங்கியவுடன் விக்ரம் மற்றும் வாணிபோஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபிசிம்ஹா, வாணிபோஜன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தலைப்பு 'பபூன்' என வைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியான போதிலும், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.