தல அஜித் திரைத்துறையில் மட்டுமின்றி கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகித்தார். இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு ஆளில்லா குட்டி விமானம் ஒன்றை வடிவமைத்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூட தக்‌ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் பெரும் பாராட்டுக்களை பெற்றது. 

 

இதையும் படிங்க: சரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் தங்களது உயிரையும் பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க போதுமான ஊழியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. அதற்கு அதிரடி மாற்றாக களம் இறங்கியது அஜித்தின் தக்சா குழு, ட்ரோன் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. 

 

இதையும் படிங்க:  கவர்ச்சியில் யாஷிகா ஆனந்தையே அலேக்காக ஓரங்கட்டிய தங்கை... 18 வயசிலேயே குட்டை உடையில் கொடுத்த கிளாமர் போஸ்கள்!

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய தக்க்ஷா டீம் தான் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரசுடன் இணைந்து செய்து வருகிறது. ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதன் திறனை மேலும் மேம்படுத்த தக்சா குழு முடிவெடுத்தது. இதையடுத்து ட்ரோனில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 16 லிட்டர் கொள்ளளவு உள்ள கிருமி நாசினியை சுமந்து செல்லும் அளவிற்கு வடிமைப்பை மாணவர்கள் மேம்படுத்தியுள்ளனர். மேலும் இந்த ட்ரோன் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 விநாடிகளில் கிருமி நாசினி தெளிக்க முடியும். தற்காலிக தேவைகளுக்கு ஏற்றபடி மாற்றம் செய்யப்பட்டுள்ள தக்சா ட்ரோனின் சோதனை முன்னோட்டம் சில நாட்களுக்கு முன்பு சென்னயில் நடைபெற்றது. 

 

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

இப்போது சென்னையின் சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைக்கேள்விப்பட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், நடிகர் அஜித்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். “அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுக்கள். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில்  தொழில்நுட்ப பங்களிப்புக்கு அவர் பெரும் பங்கு வகிக்கிறார்” என கூறியுள்ளார். மேலும் கர்நாடகாவிலும் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.