அதீத குடி போதையில், மாடல் அழகி காரை மின்னல் வேகத்தில் ஓட்டி சென்று, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கார் ஒன்று மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் அளவில் மிகவும் வேகமாக சென்றது. அதை கண்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கரணம் இவர் மற்றவர்களை இருக்கும் அளவிற்கு சென்றுள்ளார். 

எனவே அந்த காரை வடபழனி ஆற்காடு சாலையில் வாகன ஓட்டிகள் மடக்கிப்பிடித்தனர். இப்படி அசுர வேகத்தில் காரை ஓட்டிச் சென்றது யார் என்று பார்த்தபோது உள்ளே ஒரு பெண் இருந்துள்ளார். அவர் குடி போதையில் இருந்ததை அறிந்த அவர்கள் அவரை காரை விட்டு இறங்குபடி தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணோ... தன்னை மடக்கி பிடித்தவர்களை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டுள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு போலீசாரும் வந்துள்ளனர். மேலும் மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்ட அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரிய வந்தது. அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், இரவு நேரம் என்பதால் அவரை காலையில் ஆஜராகும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் மாடல் அழகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.