ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Kantara Chapter 1 Trailer Release Date : கன்னடப் படங்கள் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. இதற்கு கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற படங்களே சாட்சி. அதன் பின் வெளிவந்த காந்தாரா திரைப்படம் சாதனைகளுக்கு மேல் சாதனைகளைப் படைத்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான காந்தாரா, கோடிக்கணக்கில் வசூல் செய்து இந்தியத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது. ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் முதலில் கன்னடத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது. கன்னடப் பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடிய பிறகு, மற்ற மொழிப் பார்வையாளர்களிடமிருந்து தேவை அதிகரித்தது.

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், வசூலையும் குவித்தது. ஓடிடி பார்வையாளர்களுக்காக ஆங்கிலப் பதிப்பும் வெளியிடப்பட்டது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 2022-ல் வெளியான 'காந்தாரா' பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது. இப்போது அதன் அடுத்த பாகமான 'காந்தாரா: சாப்டர் 1' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர் ரிலீஸ் எப்போது?

காந்தாரா முதல் பாகத்தை காட்டிலும் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வருகிற அக்டோபர் 2ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் பிசினஸும் மிகப்பெரிய அளவில் நடந்து வருவதால், கன்னட சினிமாவில் இருந்து அடுத்த 1000 கோடி படமாக காந்தாரா சாப்டர் 1 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற செப்டம்பர் 22-ந் தேதி பிற்பகல் 12:45 மணிக்கு காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். டிரெய்லரில் பிரம்மாண்ட காட்சிகள் நிரம்பி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு போட்டியாக தமிழில் தனுஷ் நடித்த இட்லி கடை படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.