கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் அம்பரீஷ்  200 க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்தவர். இவர் தமிழில் ரஜினி நடித்த ப்ரியா படத்தில்  நடித்துள்ளார்.

சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அம்பரீஷ், நடிகை சுமலதாவை திருமணம் செய்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மூன்று முறை மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், காவிரிப் பிரச்சனையில் பதவியை ராஜினாமா செய்தார்.கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.

நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளால் அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அம்பரீஷ், சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது.