பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்ற பலருக்கும் பெயர், புகழ், பட வாய்ப்புகள் என சகலமும் கிடைக்கும். ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் ரசிகர்கள் பட்டாளத்தை விட ஹேட்டர்ஸ் பட்டாளம் தான் அதிகமாக இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆகிவிடலாம், என கனவு கண்ட மீரா மிதுனுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் நொந்துபோன மீரா மிதுன் தமிழகம் தனக்கு சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை. நானெல்லாம் பாலிவுட் பீஸ் இந்திக்கு போய் பார்த்துக்குறேன் என சொல்லிவிட்டு மும்பையில் செட்டிலானார். 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகாவிற்கு சவால் விட்ட சமந்தா... மாமனார் சொன்ன காரியத்தை எப்படி முடிச்சிருக்காங்க பாருங்க

பாலிவுட், ஹாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், விளம்பர உலகில் தான் சூப்பர் மாடல் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மீரா மிதுன், பப்ளிசிட்டிக்காக பல வேண்டாத வேலைகளை செய்து வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் படுகவர்ச்சி உடையில் கண்கூசும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அது ஒன்னும் பெருசா ஒர்க் அவுட் ஆன மாதிரி தெரியல.. அதனால் ரூட்டை மாற்றிய மீரா மிதுன் கோலிவுட் பிரபலங்களை விமர்சிப்பதன் மூலம் தான் பிரலமாக முயற்சித்து வருகிறார். 

 

நேற்று மீரா மிதுனுக்கு என்ன ஆச்சி என தெரியவில்லை. கொந்தளித்து போன மனநிலையில் தமிழ்நாட்டையும், கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான ரஜினி, விஜய்யையும் தரக்குறைவாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். முதல் ட்வீட்டில், “தமிழகம் என்னை ஒதுக்கிவைத்துவிட்டது. அதற்கு நன்றி. அதனால் தான் நான் இப்போது சூப்பர் மாடலாக இருக்கிறேன். அதேபோல் கோலிவுட் எனக்கு எதிராக இருப்பதால் பாலிவுட், ஹாலிவுட்டில் பணியாற்றி வருகிறேன். ஆனால் தமிழகம் ஏன் இன்னும் என்னை டார்கெட் செய்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. என்னை விமர்சிப்பது தான் அவர்களின் ஒரே வேலையா?” என பொங்கியுள்ளார். 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

“தமிழ்நாடு தமிழர்கள், இந்துக்களுக்கானது. ஆனால் இங்கு மலையாளிகளும், கிறிஸ்துவர்களும் ஆதிக்கம் செலுத்துவதோடு, ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கின்றனர். எனக்கு கோபம் வந்தால் மதுரையை எரித்த கண்ணகியைப் போல நானும் தமிழ்நாட்டை எரித்துவிடுவேன். பிரதமர் மோடி தமிழ்நாட்டை அழிக்கவும்” என புலம்பி தீர்த்துள்ளார். 

மற்றொரு பதிவில் “கன்னடர் ரஜினிகாந்தும், கிறிஸ்துவர் விஜய்யும் என் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள். சைபர் புல்லியிங் பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என சம்பந்தா சம்பந்தம் இல்லாத விஷயங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “ரஜினி, விஜய் என்றால் ஊருக்கே தெரியும், உங்களுக்கு அவங்களுக்கு யாருன்னே தெரியாது. சும்மா காமெடி பண்ற மாதிரி ட்வீட் பண்ணாதீங்க” என கலாய்த்துள்ளனர். “விஜய், ரஜினி ரசிகர்களோ நீ யார் கன்னடர், கிறிஸ்துவர் என சர்டிபிகேட் கொடுக்க. வேணுமன்னே ஏடாகூடமா பேசி பப்ளிசிட்டி தேட பார்க்குறீயா?” என வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.