பிரபல கன்னட நடிகரும், ஆக்‌ஷன் சிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த 7ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். 39 வயதே ஆன நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து மணமுடித்த நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணியான மேக்னா ராஜ் கணவர் உடலின் மீது படுத்து கதறி அழுததை யாராலும் மறந்திருக்க முடியாது.

 

இதையும் படிங்க: “என் புருஷனை ஏன் வச்சிட்டு இருக்க”... வனிதாவை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்த பீட்டர் பால் முதல் மனைவி.....!

சிரஞ்சீவி சார்ஜா இறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 7ம் தேதி அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதை பார்க்கும் போது ஒரு மாதத்திற்கு பிறகு சிரஞ்சீவி சார்ஜாவின் குடும்பம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதை நினைத்து ரசிகர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்... சர்ச்சையை கிளப்பிய லிப் லாக் காட்சி...!

2012ம் ஆண்டு வெளியான அதூரி என்ற படம் மூலம் அண்ணனைப் போலவே ஹீரோவாக அறிமுகமானார் துருவா சார்ஜா. அதன் பின்னர் 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான பிரேரானா என்பவரை கரம் பிடித்தார். இந்நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவதாக தெரிவித்துள்ளார்.  இந்த செய்தி துருவா மற்றும் சிரஞ்சீவி சார்ஜா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.