இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும், நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து இயக்கி இருக்கும் 'காஞ்சனா 3 '  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ், பிக் பாஸ் ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தில் உருவாகியுள்ள  'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த படம் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது. அதாவது புத்தாண்டு தினத்திற்கு முன்பே ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும் இது குறித்து விரைவில் அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.