- Home
- Gallery
- Cook With Comali: இது என்ன கொடுமை? CWC ஆரம்பிக்கப்பட்ட வேகத்தில் வெடித்த பிரச்சனை.. வெளியேறிய பிரபலம்!
Cook With Comali: இது என்ன கொடுமை? CWC ஆரம்பிக்கப்பட்ட வேகத்தில் வெடித்த பிரச்சனை.. வெளியேறிய பிரபலம்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரபலம் ஒருவர் அதிரடியாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, இரண்டாவது சீஸனின் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், கடைசியாக நடந்து முடிந்த சீசனில் மைம் கோபியும் டைட்டிலை வென்றனர்.
காமெடிக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின்... 5-ஆவது சீசன் பல சர்ச்சைகளுக்கு நடுவே, கடந்த வாரம் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்.. தற்போது சன் டிவியில் தொடங்கப்பட உள்ள 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சிக்கு தாவி விட்டார். இவர் மட்டும் இன்றி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளரை ஆகியோரும் அந்த நிகழ்ச்சிக்கு தாவியுள்ளனர்.
அதே போல் விஜய் டிவியில் இருந்த கோமாளிகள் சிலர் சன் டிவிக்கு சென்று விட்டதால்... இம்முறை புதிய கோமாளிகளுடன் 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமானது.
செஃப் தாமு மற்றும் மதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ரக்ஷன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். விடிவி கணேஷ், சுஜிதா, வசந்த் வஷி, ப்ரியங்கா, உள்ளிட்ட பல போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கியது.
அதே போல் கோமாளியாகவும் விஜய் டிவியை சேர்ந்தது புதிய பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வந்தனர். தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, "நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.