கமல் ஹாசன் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒவ்வொரு மாற்றங்கள் குறித்து, இப்போதெல்லாம் மறக்காமல் ட்வீட் செய்து வருகிறார். மேலும் தன்னுடைய ட்வீட் குறித்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருகிறார்.
அதே போல அவர் எது சொன்னாலும் அது தற்போதைய சூழலுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தனது கருத்தை முன் வைத்த கமல்ஹாசன் இப்போது மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதை கிண்டல் செய்யும் விதமாக கமல் இவை பைத்தியம் மற்றும் போலி என குறிப்பிட்டுள்ளார். ஏன் இப்படி சொன்னார் என இது வரை பலர் குழம்பி வருகின்றனர் . ஒரு சிலர் அவருடைய அதிருப்தியை நேராக கூறிவிட்டார் என சொல்கின்றனர் .
