அனைவரது அன்பிற்கும் தலைவணங்குகிறேன்..! பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி சொன்ன கமல்..!
உலக நாயகன் கமல் ஹாசன் (kamal hassan) இன்று தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று இரவு முதலே, கமல்ஹாசனுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள், அரசியல் வாதிகள், கட்சி தொண்டர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைதெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் கமல் ஹாசன்.
உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று இரவு முதலே, கமல்ஹாசனுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள், அரசியல் வாதிகள், கட்சி தொண்டர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைதெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் கமல் ஹாசன்.
தமிழ் திரையுலகின் ஈடு இணையில்லா நடிகராகவும், தமிழக அரசியலிலும் களம் கண்டு... மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கும் விதமாக, நேற்றைய தினம் 'விக்ரம்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகள்: அய்யோ... செம்ம கியூட் குழந்தையாக போல் விதவிதமாக ரியாக்ஷனில் ரசிகர்களை ஈர்க்கும் அனுபமா பரமேஸ்வரன்!
மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் மாலை வரை நாள் முழுவதும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவிழாவாகக் கொண்டாட பட உள்ளதாக கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது. அதாவது, காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்தில் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக்கொண்டு கண் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உறுப்புதான முகாம் மற்றும் பல் மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்படும் என்றும், தொடர்ந்து கட்சித் தலைமை அலுவலகத்திலும், ராஜ்கமல் திரைப்பட நிறுவன அலுவலகத்திலும் மதிய உணவாக சுமார் 1,500 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்: கழுத்தில் மாட்டி இருக்கும் தம்மாத்தூண்டு கயிறு தான் பேலன்ஸ்..! முரட்டு கவர்ச்சியில் மிரள விட்ட மிர்னாலினி..!
அதே போல் கோவை தெற்குத் தொகுதியில் தனது சொந்த செலவில் குடிநீர்த் திட்டங்களை காணொலி மூலம் கமல் துவங்கி வைப்பதாகவும், அத்துடன் e-library, கமல் கலைக்கூடம் மற்றும் மய்யம் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற திட்டங்களையும் துவங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது சென்னை பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்திடுமாறும், இதுவே தனக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு என ட்விட் செய்திருந்தார்.
மேலும் செய்திகள்: Malavika Mohanan: ஜாக்கெட் போடாமல்... மாராப்பை முறுக்கி கவர்ச்சியில் எல்லை மீறிய மாளவிகா மோகனன்! செம்ம ஹாட்!
தற்போது தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி செல்லும் விதமாக கமல் போட்டுள்ள டீவீட்டில்... "நேரிலும் தொலைபேசியிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரது அன்பிற்கும் தலைவணங்குகிறேன்'. என கூறியுள்ளார்.