கழுத்தில் மாட்டி இருக்கும் தம்மாத்தூண்டு கயிறு தான் பேலன்ஸ்..! முரட்டு கவர்ச்சியில் மிரள விட்ட மிர்னாலினி..!
டிக் டாக் பிரபலமும் (Tik tok Fame), நடிகையுமான மிர்னாலினி ரவி (Mirnalini Ravi) அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், முன்பை விட கவர்ச்சியையும் கொஞ்சம் கூடுதலாகவே காட்ட துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, சிவப்பு நிற ஹாட் உடையில்... கழுத்தில் இருக்கும் தம்மாத்தூண்டு கயிறு பேலன்சில் நிற்கும் உடையில் போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார்.
நடிப்பு திறமையை உலகிற்கு வெளிப்படுத்த முடியாமல் இருந்த பலருக்கு வரப்ரசாதமாக இருந்தது டிக் டாக் செயலி. இதன் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பலர் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் டிக் டாக் செயலி மூலம் தன்னுடைய அழகாலும், அசத்தலான இமிடேஷன் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் மிர்னாலினி.
இவரது திறமைக்கு கிடைத்த பரிசாக, ததமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
சாம்பியன் என்கிற படத்தில் மூலம் ஹீரோயினாக மாறிய மிர்னாலினி, இந்த வருட தீபாவளிக்கு சசிக்குமார் ஜோடியாக இவர் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், மற்றும் விஷால் நடித்த எனிமி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் அரைத்த மாவையே மீண்டும் அரைத்து போன்ற கதை தான் என்றாலும், எனிமி படம் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தோடு எடுக்கப்பட்ட படமாக உள்ளது.
மேலும் எம்.ஜி.ஆர் மகன் படத்தில் கிராமத்து மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள மிர்னாலினி, எனிமி படத்தில் கவர்ச்சியை கூட்டி காட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து, இவரது கைவசம் ஜாங்கோ மற்றும் கோப்ரா ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. மற்ற சில படங்களிலும் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பட வாய்ப்பை பிடிக்க அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் நடத்தி வரும் மிர்னாலினி தற்போது சிவப்பு நிற ஹாட் உடையில் கழுத்தில் உள்ள கயிற்றின் பேலன்சில் நிற்கும் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.