தொகுப்பாளர் கமல் ஹாசன் முதல் புரோமோவிலேயே கையில் எலிமினேஷன் கார்டுடன் உள்ளே வந்த காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா? அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 56 ஆவது நாளான இன்று, ஒருவர் வெளியேற உள்ளது நாம் அறிந்தது தான். மேலும் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றிருந்த, 7 பேரில் நான்கு பேர் காப்பாற்றப்பட்டதாக நேற்றைய தினம் கமல் அறிவித்தார்.

மீதம் உள்ள ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகிய 3 பேரில் ஒருவர் வெளியேற உள்ளனர். சம்யுக்தா பெரிதாக கன்டென்ட் கொடுக்க வில்லை என்றாலும், தனக்கான ஒரு ஆதரவு  கூட்டம் இருந்ததால், நாமினேஷன் லிஸ்டில் இம்பெறாமல் தப்பித்து வந்தார். ஆனால் எவிக்ஷன் ப்ரீ பாசை கை பற்றிய அனிதா, அவருக்கு பதிலாக நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறாமல் இருந்த சம்யுக்தாவை கோர்த்து விட்டார். இதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சம்யுக்தாவின் பெயரும் இணைந்தது.

மேலும் செய்திகள்: நீ சிண்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா?... கொஞ்சுண்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களின் வர்ணனைகளை வாரிக்குவிக்கும் அனிகா...!
 

எனவே தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சனம் ஷெட்டி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாகவும், சம்யுக்தா வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: மன்மதனாக மாறிய சிம்பு... ஸ்லிம் லுக்கில் ஜம்முன்னு வெளியிட்ட வைரல் செல்ஃபி...!
 

இது ஒருபுறம் இருக்க, தற்போதைய முதல் புரோமோவில், யார் யார் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி... இன்று வெளியேற உள்ள பொறியாளரை யார் என்பதை தெரியப்படுத்தும் அட்டையை வெளியே எடுக்கிறார். அர்ச்சனா குரூப் தங்களுக்கு பிடித்தவர்கள் வெளியேற கூடாது என ஒருவரை ஒருவர் கையை பிடித்தபடி அமர்ந்திருக்கிறார்கள். 

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகியுள்ள அந்த புரோமோ இதோ...