Asianet News TamilAsianet News Tamil

Indian 2 Trailer: இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது..! அசத்தலான போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு!

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

kamalhaasan starring indian 2 movie Trailer release date announced mma
Author
First Published Jun 23, 2024, 12:43 PM IST | Last Updated Jun 23, 2024, 12:43 PM IST

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'இந்தியன்'. சேனாபதி என்கின்ற சுதந்திர போராட்ட வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று கமல்ஹாசன் நடித்திருந்தார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் இப்படத்தில் கமல் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படதின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் இருவரும் இணைய உள்ளதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அதிகார பூர்வமாக அறிவித்தனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஒருவழியாக 2019-ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், கமலுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி, கிரேன் விபத்து, கொரானா பிரச்சனை என பல தடைகள் வந்தன. ஒருகட்டத்தில் இப்படத்தை அப்படியே விட்டுவிட்டு இயக்குனர் ஷங்கர் ராம் சரண் படத்தை இயக்க சென்ற நிலையில், லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று மீண்டும் இயக்குனர் ஷங்கரை இப்பததை இயக்க வைத்தது.

kamalhaasan starring indian 2 movie Trailer release date announced mma

அதர்வா - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் முக்கிய பணிகள் துவக்கம்!

ஒருவழியாக சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வருகின்ற ஜூலை மாதம் 12ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் மிகவும் பெரிதாக இருப்பதால் மூன்று பாகமாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள  இந்த திரைப்படத்தில், நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரபல நடிகை காஜல் அகர்வால், மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

kamalhaasan starring indian 2 movie Trailer release date announced mma

Devayani: 2 ஹீரோயின்ஸ் ரெடி! அம்மாவை மிஞ்சிய அழகில் தேவயானியின் மகள்கள்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஆடியோ லான்ச், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது அனைவரும் அறிந்ததே. படம் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து இப்படத்தின் அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் ட்ரைலர் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் எத்தனை மணிக்கு வெளியாகும் என்கிற விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios