பணக்கஷ்டத்தால் அவதி... மீண்டும் நடிக்க வந்த கமலின் முன்னாள் மனைவி- மகள்கள் ஹீரோயினாக இருந்தும் இந்த நிலைமையா?
sarika : நடிகை சரிகா, தான் லாக்டவுன் சமயத்தில் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 1988-ம் ஆண்டு நடிகை சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக வலம் வருகின்றனர். கமல்ஹாசன் - சரிகா தம்பதி கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பெற்றோர் பிரிந்தபோதும் மகள்கள் சுருதியும், அக்ஷராவும் தொடர்ந்து இருவர் மீது அன்பு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சரிகா, தான் லாக்டவுன் சமயத்தில் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சரிகா சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், இரண்டு முறை தேசிய விருதுகளை வெறுள்ளார். சிறந்த நடிகைக்காக ஒருமுறை தேசிய விருது வென்ற இவர், ஹே ராம் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை வென்றார்.
கமலை திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சரிகா, லாக்டவுன் சமயத்தில் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டதால் சீரியலில் நடிக்க சென்றதாக கூறியுள்ளார். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தான் தனது அன்றாட செலவுகளை பார்த்து வருவதாக சரிகா கூறியுள்ளார். 2 மகள்களும் நடிகையாக இருக்கும்போது, பணமின்றி கஷ்டப்படுவதாக நடிகை சரிகா கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Bigg Boss Anitha sampath :நீண்டநாள் கனவு நனவாகிடுச்சு.. குட்நியூஸ் சொன்ன அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்