ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது... மணிப்பூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன் காட்டம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழல் நிலவி வருவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் பதிவிட்டுள்ளார்.

Kamalhaasan condemns Manipur incident

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெடித்த வன்முறை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதற்கு மத்திய, மாநில அரசுகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே அங்கு நடந்த ஒரு கொடூரச் செயல் தற்போது நாட்டையே உலுக்கி உள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட சிலர் அங்குள்ள இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தான் தற்போது நாட்டையே உலுக்கு உள்ளது. இந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளன. தற்போது அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியான பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்... மரண தண்டனை கொடுக்கனும்... மணிப்பூர் சம்பவம் குறித்து கொந்தளித்த குஷ்பூ மற்றும் அக்‌ஷய் குமார்

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் மோடி முதல் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தகைய கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதேபோல் சினிமா பிரபலங்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், மணிப்பூர் சம்பவம் குறித்து காட்டமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டுவிட்டில், “மணிப்பூரில் நடைபெற்றுள்ள கொடூரத்தால் ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழல் அங்கு நிலவுகிறது” என குறிப்பிட்டுள்ளார் கமல்.

இதையும் படியுங்கள்... இந்த நாட்டுல என்ன நடக்குகு? இது மன்னிக்க முடியாத குற்றம்... மணிப்பூர் கொடுமையால் மனம் உடைந்த தமிழ் பிரபலங்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios