இந்த நாட்டுல என்ன நடக்குகு? இது மன்னிக்க முடியாத குற்றம்... மணிப்பூர் கொடுமையால் மனம் உடைந்த தமிழ் பிரபலங்கள்
மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து தமிழ் பிரபலங்களும் கவலையுடன் சமூக வலைத்தளங்களில் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் பிரபலங்களும் அது பற்றி தாங்கமுடியாத துயரத்துடன் சமூக வலைத்தளங்களில் மனம் திறந்துள்ளனர்.
நடிகர் & ச.ம.க தலைவர் சரத் குமார்:
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர்போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்:
மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம். மன்னிக்க முடியாத பெருங்குற்றம். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…
மணிப்பூர் சம்பவத்துக்கு மாநில அரசுதான் பதில் சொல்லணும்! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
நடிகை பிரியா பவானி சங்கர்:
மணிப்பூர் பெண்கள் - சமூகம், சமூகம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வியடைந்தன. இந்தச் செயலை மனிதர்களாகிய நாம் நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இது போன்ற பல கொடூரங்களுக்கு இது ஒரு சான்று மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன்:
மணிப்பூர் சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக என் இதயம் துடிக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை நிறுத்துவதற்கு, முன் எப்போதும் இல்லாத கடுமையான தண்டனை அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் குணமடைய என் பிரார்த்தனைகள் உடனிருக்கும்.
நடிகை ரஷ்மிகா மந்தனா:
மணிப்பூரைப் பற்றிய செய்திகளை என்னால் நம்பவே முடியவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இந்த உலகத்தில் என்னதான் நடக்கிறது? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.\
போலி வீடியோ பார்த்து வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்! மணிப்பூர் கொடூரச் சம்பவத்தின் பின்னணி இதுதான்!
நடிகை ராகுல் பிரீத் சிங்:
மணிப்பூர் காணொலி மிகவும் கவலையளிக்கிறது.. இது மனிதநேயத்துக்கு அவமானம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன். அவ்வாறு இருந்தால் வேறு யாரும் அவ்வாறு செய்ய நினைக்கத் துணிய மாட்டார்கள். அப்பெண்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்
நடிகை கஸ்தூரி:
ஜனநாயகம் மனிதர்கள் பின்பற்றவேண்டியது; மிருகங்களுக்கானது அல்ல. இந்த அரக்கர்கள் மிருகங்களைவிட மோசமானவர்கள். அவர்களுக்கு இதயமே இல்லையா? அவர்களுக்கும் ஒரு தாய் இல்லையா?
பாடலாசிரியர் வைரமுத்து:
தெய்வம் என்பார் பெண்களை;
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்
பார்வதியை
நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்
நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்
அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்
இன்னும் மணிப்பூர்
இந்தியாவில்தான் இருக்கிறது
இயக்குநர் சி.எஸ். அமுதன்:
மணிப்பூர் நமது ஜனநாயகத்தின் மீதான சோதனை. இந்தப் பயங்கரம், டிஸ்டோபியன் நரகத்தின் இந்தக் காட்சிகள் நம்மைப் பேசத் தூண்டவில்லை என்றால், அது இந்தப் பழிவாங்கும் பாசிச ஆட்சியைப் பற்றிய பயம்தான். நாம் பாசாங்கு செய்வதை விட்டுவிடலாம்.
பாடகி சின்மயி:
பிரதமரிடம் இருந்து ஒரு வார்த்தை வரவில்லை. ஒரு பேச்சோ, ஒரு ட்வீட்டோ கூட இல்லை. தேசிய மகளிர் ஆணையமும் எதுவும் செய்யவில்லை. எம்.ஜே. அக்பர், ஹத்ராஸ், குல்தீப் செங்கர், பில்கிஸ், பிரிஜ் பூஷன் விவகாரங்களில் நடந்துகொண்டது போல்தான் நடந்துகொள்கிறார்கள்.