மணிப்பூர் சம்பவத்துக்கு மாநில அரசுதான் பதில் சொல்லணும்! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை அறிய மருத்துவ பரிசோதனை செய்து அதைப்பற்றிய விவரத்தையும் குறிப்பிட்டு நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம்.. இரு பெண்களுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை - மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்!
மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையினரான மெய்தீ சமூகத்தினருக்கும் மலைப்பகுதிகளில் வசிக்குமு் குக்கி பழங்குடியி மக்களுக்கும் இடையே மே 3ஆம் தேதி முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. மெய்தீ சமூகத்தினர் தங்களுக்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். குக்கி சமூகத்தினர் அதனை எதிர்க்கின்றனர்.
மெய்தீ சமூகத்திற்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்து குக்கி பழங் குடியினர் ஒற்றுமை பேரணி நடத்திபோது வன்முறை தொடங்கியது. மே 3 முதல் மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை வெளியான வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக பரவி வைரலானது.
நாட்டையே தலைகுனிய வைக்கும் இந்தச் சம்பவம் நடந்து 77 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) வீடியோவில் காணப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ஹுரெம் ஹீரோதாஸ் மெய்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ள மணிப்பூர் காவல்துறை அவரது புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மேலும் இருவரும் கைதாகியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகளுடன் மற்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 12 குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.
போலி வீடியோ பார்த்து வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்! மணிப்பூர் கொடூரச் சம்பவத்தின் பின்னணி இதுதான்!