மணிப்பூர் கலவரம்.. இரு பெண்களுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை - மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்!
குற்றவாளிகளில் ஒருவனான 32 வயதான ஹுய்ரெம் ஹெராதாஸ் சிங் இன்று காலை கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்தது.
மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக சாலையில் அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட குற்றவாளிகளில் ஒருவனான 32 வயதான ஹுய்ரெம் ஹெராதாஸ் சிங் இன்று காலை கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்தது. வைரலாக பரவிய அந்த வீடியோவில் இருந்த பச்சை சட்டை அணிந்த நபர் தான் அவன் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 70 நாட்களாக இதுபோன்ற கலவரங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது தான் இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம்: அமித் ஷா விரிவாக பதிலளிப்பார் - பாஜக அரசு தகவல்!
"இந்த வீடியோவைப் பார்த்ததும், இந்த கொடூரமான, மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு எதிராக நாங்கள் செயல்பட முடிவு செய்து, தற்போது இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது" என்று அம்மாநில முதல்வர் அறிவித்தார். "பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு எதிராக கடைசியாக நடக்கும் குற்றமாக இது இருக்க வேண்டும். நாம் நமது சகோதரிகள் தாய்மார்கள் மற்றும் பெரியவர்களை மதிக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாக பரவிய நிலையில், இன்று மாலை, உள்ளூர்வாசிகள் ஹுரிம் ஹெராதாஸ் சிங்கின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். சமூகம் என்ற பேதமின்றி, குக்கிகள், மெய்தியர்கள், முஸ்லிம்கள் என எவர் மீதும் நடத்தப்படும் இத்தகைய செயல்களுக்கு அனைத்து தாய்மார்களும் பெண்களும் எதிரானவர்கள் என்று உள்ளூர் பெண் ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலி வீடியோ பார்த்து வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்! மணிப்பூர் கொடூரச் சம்பவத்தின் பின்னணி இதுதான்!