Kamal who slapped the cheeks on the cheek What? Video inside ...

நடிகர் கமல்ஹாசன் தனது காலில் விழுந்த ரசிகரை கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி உள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து அரசியலையும், அரசியல்வாதிகளையும் விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ஒரு கட்டத்தில், தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வராக விரும்புவதாகவும் வெளிப்படையாக கூறியிருந்தார்.

மேலும், கேரளா, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தின் முதல்வர்களையும் அவர் சந்தித்து அரசியல் நிமித்தமாகப் பேசியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து அவர் வாயைத் திறந்தாலே சர்ச்சையாக வெடிக்கின்றன. அமைச்சர்கள் அவருக்கு பதிலடி கொடுப்பதற்கு என்றே பேட்டிக் கொடுக்க கிளம்புகின்றனர்.

இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆதாரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே விரைவில் அவர் தன் புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வெளியிடுவார் என்று அவரே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன் காலில் விழப்போன ரசிகர் ஒருவரை கன்னத்தில் ஆவேசமாக அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டது.

இது குறித்து கமல் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது கொசுறு தகவல்.