kamal visit change after ennoor

நடிகர் கமலஹாசன் இன்னும் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி உறுதியாக அறிவிக்காமலேயே நேற்று திடீர் என எண்ணூர், வல்லூர் மின் நிலையம் மற்றும் வடசென்னை மின் நிலையமும் கொசஸ்தலை ஆற்றில் கொட்டி வரும் சாம்பல் கழிவுகளை பார்வையிட்டார்.

கமலின் விசிட் குறித்து அறிந்த ஒரு சில மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 'சுந்தர வள்ளி' இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பல முறை மனு கொடுத்தும் இது குறித்து கண்டுக்கொள்ளாமல் இருந்த அரசு நிர்வாகம் திடீர் என கவனம் செலுத்துவதால் தங்களுடைய குறை விரைவில் தீர்க்கப்படும் என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.

தற்போது இவர்களது நம்பிக்கைக்கு உயிர் ஊட்டும் வகையில் எண்ணூர் பகுதியில் தொடர்ந்து பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது.

கமல் விசிட் அடித்த மறுநாளே, அதாவது இன்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கைகளில் விழுப்புணர்வு பதாதைகளை ஏந்தி பேரணி நடத்தி வருகின்றனர்.

இத்தனை நாள் போராடியும் கண்டுக்கொள்ளாத அரசு, கமல் கால் வைத்தை அடுத்து நிகழும் மாற்றத்தை கண்டு அந்த பகுதி மக்களே மீள முடியாத திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.