Kamal said thanks to rajinikanth for rising Film Industry

ஜி.எஸ்.டி. விவகாரத்தில் திரையுலகுக்காக குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, நடிகர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசின் உள்ளாடசி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

இரட்டை வரி விதிப்புக்கு, திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால், தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் பழனிசாமியுடன், திரையரங்கு உரிமையாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரி விதிப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ் திரையுலகை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு திரையுலகினரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி காந்தின் இந்த கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கமல், ஜி.எஸ்.டி. விவகாரத்தில் திரையுலகுக்காக குரல் கொடுத்த ரஜினிக்கு நன்றி என்றும், முதலில் கோரிக்கை விடுப்போம், பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.