அரசியல் வாழ்க்கையில் நுழைந்த பிறகு படங்களில் நடிப்பதை உலக நாயகன் கமல் ஹாசன் குறைத்துக் கொண்டுள்ளார். “விஸ்வரூபம் 2” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “சபாஷ் நாயுடு” என்ற படத்தை தொடங்கினார். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் நடித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் “இந்தியன் 2” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த கிரேன் விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: ஆசை ஆசையாய் சொந்த ஊருக்குச் சென்ற பாரதிராஜா... வாசலில் காத்திருந்த அதிர்ச்சி...!

அந்த பயங்கர விபத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட “இந்தியன் 2” படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவே இல்லை. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கமல் ஹாசன் “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை அறிவித்திருந்தார். அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்ட த்ரில்லர் கதையான இதை கமல் ஹாசன் இயக்கி நடிக்கவிருந்தார். இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளதாகவும், வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

தற்போது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல் ஹாசன் “தலைவன் இருக்கிறான்” படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் உள்ளாராம். அதேபோல் படத்தையும் தான் இயக்காமல் வேறு யாராவது வைத்து இயக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். இதற்கு முன்னதாக “இந்தியன் 2” படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வந்தது. அப்போது “மாஸ்டர்” மற்றும் தெலுங்கு படங்களில் கமிட்டாகி இருந்த விஜய் சேதுபதியால், கமலின் அழைப்பை ஏற்க முடியவில்லை. ஆனால் மறுபடியும் ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் சார் உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கமலிடம் கோரிக்கை வைத்திருந்தார். 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

சமீபத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி பங்கேற்று பேசிய லைவ் நிகழ்ச்சிக்கு கூட தலைவன் இருக்கிறான் என்றே பெயரிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியிலும் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக விஜய் சேதுபதி கமலிடம் தெரிவித்திருந்தார். இதை எல்லாம் வைத்து கணக்கு போட்ட கமல் ஹாசன் தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.