ஸ்டூடியோவிற்குள் சுற்றி திரிந்த சினிமா கேமராக்களை கிராமங்களின் பச்சை பசுமையை படம் பிடிக்க வைத்தவர் இயக்குநர் பாரதிராஜா. அவுட்டோர் ஷூட்டிங் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர். தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த பல படைப்புகளுக்கு சொந்தக்காரர். வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்தியேன் நடித்த  “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் தாத்தாவாக நடித்திருந்தார். தற்போது சிம்புவுடன் “மாநாடு” படத்தில் கைகோர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள வீட்டில் தங்கி வந்தார். சென்னையில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் இருமடங்காக அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை கொரோனா ஹாட் ஸ்பார்ட்டாக உள்ளது. சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூருக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

இந்நிலையில் நேற்று இயக்குநர் பாரதிராஜா தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார். தேனிக்குள் நுழையும் முன்பே நுழைவாயிலில் வைத்து பாரதிராஜாவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான ஸ்டிக்கரும் இயக்குநர் பாரதிராஜாவின் தேனி வீட்டின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது.