பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. படப்பிடிப்பு நடைபெறும் போதே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கமல் ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: தயாரிப்பாளர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் ராஷ்மிகா மந்தனா... இப்ப இது தேவையா?

 பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அன்றைய படப்பிடிப்பிற்காக தயாராகி கொண்டிருந்த காஜல் அகர்வால், இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசன் ஆகியோர் நூழிலையில் உயிர் தப்பினர். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் செல்ல பேரனுக்கு இன்று பிறந்தநாள்... வைரலாகும் கேக் கட்டிங் போட்டோ...!

அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியாகின. 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

ஆனால் இந்தியன் 2 படத்தை பாதியில் கைவிடும் எண்ணம் துளி கூட இல்லை என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இந்தியன் 2 மற்றும் பொன்னியின் செல்வன் படத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்றும் லைகா நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லாக்டவுன்  முடிந்த பிறகு இரு படங்களின் ஷூட்டிங்கும் சும்மா சூறாவளி வேகத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.