சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், நடிகர் விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. முதல் கணவரான அஸ்வினுக்கும், சவுந்தர்யாவிற்கும் பிறந்த மகன் வேத் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு சவால் விடும் விதமாக ஒவ்வொரு பேரன்களும் உருவாகி வருகின்றனர். ஒவ்வொருவரும் போட்டி, போட்டுக்கொண்டு ரஜினி ஸ்டைலை பிரதிபலிக்கின்றனர். 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

ஏற்கனவே தனுஷ் மகன்களின் புகைப்படங்கள் பல சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது சுட்டி பையன் வேத் கிருஷ்ணாவின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.  தனது செல்ல மகன் வேத் செய்யும் குறும்புகளை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை சவுந்தர்யா ரஜினிகாந்த் தவறியதே இல்லை. அப்பாவுக்கு எப்படி இளைய மகள் சவுந்தர்யா என்றால் தனி பாசமோ அதேபோல் தான் பேரன் வேத் மீதும் சூப்பர் ஸ்டார் அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கடந்து வந்த செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அப்படி சூப்பர் ஸ்டாரின் செல்ல குட்டியான வேத் இன்று தனது 5வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நண்பர்கள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட எந்த சொந்தமும் இல்லாமல் மிகவும் சிம்பிளாக வேத் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 

இதையும் படிங்க: வீட்டுக்குள் வித்தியாசமாக படுகவர்ச்சி போட்டோ ஷூட்... அப்பா, அம்மாவுடன் சேர்ந்து எல்லை மீறிய பிரபல நடிகை...!

அப்பா மற்றும் அம்மாவுடன் சுட்டி பையன் வேத் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சவுந்தர்யா, எங்களுடைய குழந்தை இன்று தனது 5 வயதை கடக்கிறார். வேத் பாப்பாவை வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அவ்வளவு தான் அடுத்த கணம் முதலே சூப்பர் ஸ்டாரின் செல்ல பேரனுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.