Neelorpam Promo : இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கள் பாடலான "நீலோற்பம்" பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தற்பொழுது மும்முரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியன் திரைப்படத்தின் மூன்றாம் பாகம், எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்கின்ற அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு அனிருத் இசையில் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து "பாரா" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், அதனுடைய முன்னோட்டம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
பிரபல பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் இந்த பாடல் உருவாகியுள்ளது. அபி மற்றும் சுருதிகா ஆகிய இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். "நீலோற்பம் நீரில் இல்லை, ஏன் தாண்டினாய் எல்லை.. இனி ஏதும் தடங்கல் இல்லை" என்ற வரிகள் மட்டும் இந்த முன்னோட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையில் மிக அழகான ஒரு மெலடி பாடல் மக்களின் மனதை வருட காத்திருப்பதாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதை நேரத்தில் "நீலோற்பம்" என்பது இலங்கையின் தேசிய மலராக அறிவிக்கப்பட்ட ஒரு பூவாகும். மேலும் இந்த பாடல் வரிகளில் அந்த மலரானது நீரில் இல்லை என்றும், ஏன் எல்லை தாண்டினாய் என்று நாயகன், நாயகியை கேட்பது போலவும் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால் சித்தாரத்திற்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள ரகுல் பிரீத் சிங், இலங்கை நாட்டை சேர்ந்த பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார் என்று நெட்டிசன்கள் பாடலை டீகோட் செய்து வருகின்றனர்.
