kamal favorite director n.k.vishwanathan death
தமிழ் திரையுலகில், உலக நாயகன் கமலஹாசன் நடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார்.
கடந்த சில வருடங்களாக, உடல்நலகுறைவால் அவதி பட்டு வந்த அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
கமல்ஹாசன் நடித்த 'சட்டம் என் கையில்', 'கல்யாண ராமன்', 'கடல் மீன்கள்', 'மீண்டும் கோகிலா', 'சங்கர்லால்', போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே.விஸ்வநாதன்...
'இணைந்த கைகள்', 'நாடோடி பாட்டுக்காரன்', 'பெரிய மருது', உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு நமீதா நடித்த 'ஜகன்மோகினி' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மரணத்திற்கு கோலிவுட்டை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
