senior actor appreciates actress for her performance in latest movie

நடிகையர் திலகம் சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு, இளம் இயக்குனர் அஸ்வின் நாக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தெரிந்ததும் பலரும் அவர் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு பொருந்த மாட்டார் என கூறினர். ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பாராட்டுக்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறது.

பல முன்னணி நட்சத்திரங்களும் கீர்த்தி சுரேஷிடம் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை பார்த்த சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி கூட தனது அம்மாவை போலவே திரையில் தோன்றியதாக கூறி கீர்த்தி சுரேஷுக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்

Scroll to load tweet…

தற்போது உலகநாயகன் கமலஹாசனும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை நேரில் பாராட்டி இருக்கிறார். கமலுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.அதில் கமலின் ஆசிர்வாதம் கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.