சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று  'இளையராஜா 75' நிகழ்ச்சி. மிக சிறப்பாக நடைபெற்றது.  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்  நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி, கமல் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் இடையே பேசிய கமல்ஹாசன், இளையராஜாவிற்கும் நான் அரசியலில் வந்ததில் பங்கு உண்டு என்கிற ரகசியத்தை வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகியில்,  'நான் அரசியல் கட்சி துவங்க போகிறேன் என்றதும், அறிவுரை தந்து முதலில் ஆதரித்தது என் அண்ணன் இளையராஜா தான். நீண்ட நாட்களுக்கு முன்பே அரசியலில் ஈடுபட வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார். அதேபோல் அரசியல் வேண்டவே வேண்டாம் என கூறியது எனது அண்ணன் சாருஹாசன் என கூறினார்.

மேலும் தன்னுடைய 100 படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதை பெருமையாக கூறினார்.  அதே போல்  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியா நடிகைகள் சுஹாசினி மற்றும் கஸ்தூரி கேட்ட சுவாரஸ்யமான கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.