இன்றைய தினம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்தாலும், கமல் யார் யாரிடம் என்ன கேள்வி கேட்பார். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து கொண்டு தான் இருக்கிறது.

கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த, யாஷிகா மற்றும் மகத் இருவரும், ஷெரீனை ஒரு கடிதம் எழுத சொல்கிறார்கள். அந்த கடிதத்தை நீங்கள் யாரிடமும் காட்ட தேவை இல்லை என கூறியதும், ஷெரின் தர்ஷனுக்கு கவிதையாக ஒரு கடிதம் எழுதுகிறார்.

பின் இந்த கடிதத்தை படிக்க முயன்ற போது, அந்த கடிதத்தை ஷெரீன் கிழித்து குப்பை தொட்டியில் போட்டார். ஆனால் அதில் அப்படி என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஷெரீன் கிழித்து குப்பை தொட்டியில் உள்ள கடிதத்தை எடுத்து படித்தார் தர்ஷன்.

ஆனால் இந்த விஷயம் ஷெரீனுக்கு தெரியாது. அந்த விஷயம் தான் இன்று சபைக்கு வந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்... கமல் ஷெரீனிடம் நீங்கள் எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என கேட்க, அவர் மெளனமாக சிரிக்கிறார். அதை அவர் தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைக்கிறீர்களா என கமல் கேட்க அதற்கு ஷெரீன் ஆமாம் என பதில் கொடுக்கிறார்.

ஆனால் நீங்கள் எழுதிய விஷயம் என்ன என்பது தெரிந்து விட்டது. என கூறி தர்ஷன் அதை படித்து விட்டேர்களா என கேட்க ஆம் என தர்ஷனும் கூறுகிறார். அப்போ சொல்லுங்க அதில் என்ன எழுதி இருந்தது என கேட்க தர்ஷன் பதில் சொல்ல முடியாத தர்மசங்கடத்திற்கு ஆளாகிறார். 

இருப்பினும் கமல் அந்த கிழித்து போட்ட பேப்பர் பற்றி துருவி துருவி கேட்டு கொண்டிருக்கிறார்... அந்த புரோமோ இதோ...