Kalki 2898 AD : பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் கல்கி 2898 AD.

மகாபாரதப் போரில் கிருஷ்ணரால் சபிக்கப்படும் அஸ்வத்தாமன், சுமார் 6000 ஆண்டுகள் கழித்து, 2898ம் ஆண்டு சாப விமோசனம் கிடைக்க போராடுகிறார். மீண்டும் அவதாரம் எடுக்கும் கிருஷ்ணனை கருவில் இருந்தே காப்பாற்ற துடிக்கிறார். இதுவே கல்கி 2898 AD படத்தின் முதல் பாக கதைச்சுருக்கம். அதே போல அவர் பிறக்கப்போகும் கிருஷ்ணனை காப்பாற்றினாரா இல்லையா? புதிய சக்தி பெற்ற சுப்ரீம் யக்ஷின் அதை எப்படி தடுக்கப்போகிறார்? என்பது தான் கல்கி படத்தின் 2ம் பாகம் கூறப்போகிறது.

இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு திரை உலக நடிகர் பிரபாஸ், பைரவா என்கின்ற கதாபாத்திரத்திலும் கர்ணனாகவும் நடித்திருக்கும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் சுப்ரீம் யாஷ்கினகவும், நடிகை தீபிகா படுகோனே பிறக்கப் போகும் கடவுளை தனது கருவில் சுமக்கும் தாயாகவும், நடிகர் அமிதாபச்சன் அஸ்வத்தாமனாகவும், நடிகர் துல்கர் சல்மான் பிரபாஸின் குருவாகவும், மூத்த தமிழ் திரையுலக நடிகை சோபனா மரியம் என்கின்ற கதாபாத்திரத்திலும், படத்தில் வரும் ஒரு காருக்கு குரல் கொடுத்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் நடித்து அசத்தியிருக்கின்றனர்.

"மட்ட மட்ட ராஜ மட்ட".. கோளாறான லிரிக்ஸ் - நாளை வெளியாகும் GOAT பட நான்காம் சிங்கிள்!

ஏற்கனவே சுமார் மூன்று ஆண்டுகள் படமாக்கப்பட்ட நிலையில், 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கல்கி திரைப்படம். இந்திய அளவில் சுமார் 766 கோடி ரூபாயும், இந்தியா அல்லாது உலக அளவில் சுமார் 280 கோடி ரூபாயும் வசூல் செய்து உலக அளவில் 1100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விரைவில் அடுத்த பாக பணிகள் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற 2025ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக அளவிலான தொழில்நுட்ப பணிகளின் காரணமாக இந்த இரண்டாம் பாக பட பணிகளை முடிக்க சுமார் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே வருகின்ற 2028ம் ஆண்டில் தான் கல்கி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தெரிவித்திருக்கிறார். அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள படம் என்றாலும், 3 ஆண்டுகள் இந்த திரைப்படத்திற்காக காத்திருக்க வேண்டுமா என்ற சோகத்தில் தற்பொழுது ரசிகர்கள் உள்ளார்கள்.

VOGUE மேகசீனுக்கு அதிதி - சித்தார்த் கொடுத்த ரொமான்டிக் போஸ்! திருமணம் எங்கே? சீக்ரெட்டை ரிவீல் செய்த நடிகை!