Asianet News TamilAsianet News Tamil

"மட்ட மட்ட ராஜ மட்ட".. கோளாறான லிரிக்ஸ் - நாளை வெளியாகும் GOAT பட நான்காம் சிங்கிள்!

GOAT 4th Single : பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில், நாளை தளபதி விஜயின் "கோட்" படத்தின் நான்காவது சிங்கிளாக "மட்ட" என்கின்ற பாடல் வெளியாக உள்ளது.

Thalapathy vijay GOAT 4th single matta releasing tomorrow ans
Author
First Published Aug 30, 2024, 7:45 PM IST | Last Updated Aug 30, 2024, 7:45 PM IST

தளபதி விஜயின் 68வது திரைப்படமாக உருவாகி வருகிறது "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படம். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியான நிலையில் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி "மட்ட" என்கின்ற நான்காவது சிங்கிள் பாடல், பாடலாசிரியர் விவேகின் வரிகளில் வெளியாகவுள்ளது. பாடலாசிரியர் விவேக் தான், தளபதி விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சி பாடலை எழுதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுஒருபுரம் இருக்க, இந்தப் படத்தில் இருந்து வெளியான "சின்ன சின்ன கண்கள் திறக்கின்றதே" என்கின்ற பாடலை தளபதி விஜய் பாடியிருந்தார். அதேபோல மறைந்த பாடகி பவதாரணியின் குரலை அந்த பாடலில் AI தொழில்நுட்பம் மூலம் இணைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த கோட் திரைப்படத்தில் இதுபோன்ற பல சுவாரசியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளதும் அனைவரும் அறிந்ததே. 

கையில் ஆயுதம்... கண்ணில் பயம்! 'கூலி' படத்தில் இருந்து ஸ்ருதியாசன் கேரக்டர் போஸ்டர் வெளியானது!

தளபதியின் "கோட்" திரைப்படத்தில் மறைந்த அரசியல் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய காட்சிகளையும் AI தொழில் நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்கு, நன்றி கூறும் விதமாக அண்மையில் தயாரிப்பாளர் அர்ச்சனா, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நாயகன் தளபதி விஜய் ஆகிய மூவரும், கேப்டனின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது இரு மகன்களை நேரில் சந்தித்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வந்தனர். 

வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலக அளவில் "கோட்" திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை வெளியாகும் கோட் படத்தின் நான்காவது சிங்கிள் பாடலான "மட்ட" பாடல் குறித்து தனது கருத்தினை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பாடலில் இடம் பெற உள்ள சில வரிகளையும் தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளவந்தான் முதல் அசுரன் வரை - திரைப்படமாக உருவாக்கப்பட்ட ஹிட் நாவல்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios