பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ
கல்கியின் பிறந்த நாள் வீடியோவில் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கல்கி குறித்து சிறப்புரையாற்றியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட கல்கி கடந்த 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பிறந்தவர். விஷ்ணு பக்தர் என்பதால் தனது புனைப்பெயரை கல்கியாக மாற்றிக் கொண்டார் அதன்பின்னர் இவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்றே அறியப்படுகிறார். கவிஞர், விமர்சகர், இந்திய சுதந்திர ஆர்வலர் என பல முகங்களில் அறியப்படும் கல்கி .120 சிறுகதைகள் 10க்கும் மேற்பட்ட நாவல்கள், வரலாற்று காதல் மற்றும் அரசியல் எழுத்துக்கள் என நூற்றுக்கணக்கான படைப்புக்களை உருவாக்கியுள்ளார். அதோடு திரைப்படம் மற்றும் இசை விமர்சகராகவும் அறியப்படுகிறார் கல்கி.
கல்கியின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, அலை ஓசை, கல்வியின் காதலி உள்ளிட்டவை பேசப்படும் எழுத்துக்களாக வரலாறு படைத்தது. சாகித்ய அகடாமி உள்ளிட்ட பல விருதுகளை வென்ற கல்கி எழுதிய வரலாற்று நாவல்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் இரண்டும் பல்லவ வம்சம் சார்ந்தவை, பொன்னியின் செல்வம் சோழ வம்சம் சார்ந்தது, சோலைமலை இளவரசி என்பது இந்திய சுதந்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். தற்போது இவருக்கு 123 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கிழக்கின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சிறப்பு வீடியோ ஒன்றை பொன்னியின் செல்வன் டீம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கல்கி குறித்து சிறப்புரையாற்றியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் செய்திகளுக்கு...விஜய் ராஷ்மிகாவின் வாரிசு...வெளியானது புதிய அப்டேட்
மேலும் செய்திகளுக்கு...படகில் பிகினியுடன் தண்ணீரில் அனல் பறக்கவிட்ட லைகர் பட நாயகி அனன்யா பாண்டே
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ராஜராஜசோழனாக ஜெயம் ரவி,அவரின் சகோதரனாக விக்ரம், நண்பனாக கார்த்தியும் தோன்றியுள்ளனர். அதோட ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதோட பிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
ஓணம் ஸ்பெஷலாக உடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ஷெரின்
இதில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். முன்னோட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து கட்டாயம் இந்த படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் பான் இந்திய படமாக உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.