Por Movie Teaser : பிரபல நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள போர் படத்தின் டீசர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "பெருமான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் களம் இறங்கிய நடிகர் தான் அர்ஜுன் தாஸ். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லோகேஷ் கனகராஜின் "கைதி" திரைப்படம் தான் இவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல. 

அதன் பின் இவர் நடிப்பில் வெளியான தளபதியின் "மாஸ்டர்" திரைப்படமும், உலகநாயகன் கமல்ஹாசனின் "விக்ரம்" திரைப்படமும் அவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் இப்போது ஹீரோவாக நடித்து வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "போர்". 

"நண்பேன்டா".. மீண்டும் இணைகிறது ஒரு வெற்றி கூட்டணி - டூயல் ஹீரோ சப்ஜெக்ட்டில் சாண்டா & ஆர்யா - இயக்குனர் யார்?

அதே போல பிரபல நடிகர் ஜெயராம் அவர்களின் மகனான காளிதாஸ் ஜெயராம் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மீன் குழம்பும் மண் பானையும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் அவர், இப்பொழுது இந்த போர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

YouTube video player

பிரபல டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பீஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். இரு வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் ஒரு போர் தான் இந்த திரைப்படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் தங்களுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்று தற்பொழுது வெளியாகி உள்ள அப்படத்தின் டீசர் காட்டுகிறது. 

மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்... AI-ஐ வைத்து லால் சலாமில் இசைப்புயல் நிகழ்த்திய மேஜிக்