'கலக்க போவது யாரு' காமெடி நிகழ்ச்சி மூலம் பல காமெடி நடிகர்கள் வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். முன்னணி நடிகராக இருக்கும் சிவ கார்த்திகேயன் கூட இந்த நிகழ்ச்சியின் மூலம் திறமையை வெளிப்படுத்தி தற்போது ஹீரோவாக உயர்ந்தவர் தான். அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் மூலம், காமெடி பேச்சு மற்றும் நடிப்பு மூலம் பிரபலமாகி வருபவர் யோகி. 

மேலும் செய்திகள்: பிரமிக்க வைக்கும் நடிகை நயன்தாராவின் லைப் ஸ்டைல்...! வாங்க அவருடைய வீட்டை பார்க்கலாம்..!
 

இவருக்கு இந்த ஊரடங்கு நேரத்தில், திருமணம் நடந்துள்ளது. அதுவும் காதல் திருமணம். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு யோகி, பேட்டியும் கொடுத்துள்ளார். 

இந்த திருமணம் குறித்து பேசியுள்ள அவர், தற்போது தான் திருமணம் செய்துள்ள பெண்ணின் பெயர் சௌவுந்தர்யா என கூறியுள்ளார். இவர்கள் இருவருமே, பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள். ஆனால் படிக்கும் போது இருவருக்குமே காதல் வரவில்லை. மாறாக,  தன்னுடைய கல்லூரி ரீ - யூனியன்  மீட் போது, சௌந்தர்யாவை சந்தித்துள்ளார். அப்போது காதல் மலர்ந்தாலும் அந்த காதலை வெளிப்படுத்தவில்லை யோகி.

மேலும் செய்திகள்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த, அப்பாஸின் அழகு மகள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது...!
 

இந்நிலையில் ஊரடங்கு ஓய்வு நேரத்தில், எப்படியோ காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் பிடித்து போக தற்போது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டுள்ளார்கள். 

தற்போதைய சூழல் காரணமாக திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியாவிட்டாலும், ஊரடங்கு ஓய்வு முடிவிற்கு வந்த பின்னர், அனைவரையும் அழைத்து வரவேற்பு நடத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளாராம் யோகி என்கிற யோகீஸ்வரன். 

இவருடைய திருமண செய்தியை அறிந்து இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.