ஷங்கர் உலக நாயகன் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் முதல் பாகத்தை போன்றே இந்த பாகத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.  இப்போது 22 வருடங்கள் கழித்து, இந்தியன் 2 மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

இப்படத்தில் கமல் தவிர, சிம்பு, நயன்தாரா, காஜல் அகர்வால், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு பிரத்யேக மேக்கப் டெஸ்ட் வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது என்றும், கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் நடைபெற்று வரும் அரங்கிலேயே முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஹீரோவுடன் வெறும் டூயட் பாடும் கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்வார் காஜல் அகர்வால். கமலுடன் ஜோடி சேர பல நடிகைகள் ஆவலுடன் இருக்கும்போது காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் நிலையில் உள்ளது. அஜித், விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல் அவர்களின் சீனியருடன் டூயட் பாட உள்ளார். 

முதலில் கமல்ஹாஸன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டது. நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமல்ல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் நயன்தாரா. கமல் போன்ற மெகா ஹீரோவின் படத்தில் தனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது என்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம் நயன்