வழக்கமாக அஜீத் ரசிகர்களுடன் மட்டுமே மோதும் விஜய் ரசிகர்கள் இம்முறை என்ன தைரியத்தில் தளபதி படத்துடன் மோதுகிறீர்கள் என்று ‘கைதி’கார்த்தி ரசிகர்களை வம்பிழுக்கத் துவங்கியுள்ளதால் அப்படத் தயாரிப்பாளர்கள் தமிழில் எழுத முடியாத கெட்ட வார்த்தைகளால் விஜய் ரசிகர்களைத் திட்டியிருக்கிறார்.

இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ஆகிய இரண்டே படங்கள் ரிலீஸாகின்றன. சென்சார் பிரச்சினைகள் உட்பட அத்தனையும் முடிந்து ரிலீஸுக்கு எந்தவித டென்சனும் இல்லாமல் இருப்பதால் வலைதளங்களில் ‘கைதி’படத்தின் புரமோஷன் ‘பிகில்’படத்தை விட சற்று தூக்கலாகவே இருக்கிறது.  அதிலும் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தில்,...கதாநாயகி கிடையாது...பாட்டு கிடையாது...டூப் கிடையாது’என்ற ஒரு விளம்பரம் விஜய் படத்தை மறைமுகமாக கிண்டலடிப்பதாக இருந்தது. அதை பொறுக்காத விஜய் ரசிகர்கள் கைதி படம் குறித்தும், அதன் நாயகன் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு குறித்தும் மகா மட்டமான கமெண்டுகள் போட ஆரம்பித்தனர்.

அந்த கமெண்டுகளுக்கு துவக்கத்தில் அமைதி காத்த எஸ்.ஆர்.பிரபு ஒரு கட்டத்துக்குப் பின்னர் கொதித்தெழுந்தார்.,, நான் நல்ல பாம்பு.நல்ல படம் மட்டுமே எடுப்பேன்...என்று துவங்கி படங்களில் எல்லாம் இருக்கவேண்டும் என்பது பல ரசிகர்கள் நம்பும் முட்டாள்தனமான கருத்து அது. ஒவ்வொருவரிடமும் சென்று என்னால் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் படம் எடுக்கிறோம். அதற்குத் துணை நிற்கிறோம். அவ்வளவே.ரசிகர்கள் சண்டை போட அவர்களாகவே கிண்டல் செய்ய ஏதோ தேடிப் பிடிப்பார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்றுதான் விருப்பம். முட்டாள்தனமான அணுகுமுறையின் மூலம், அவதூறான பதிவுகளை வைத்து மாற்றத்தை உண்டாக்கலாம் என்று நினைக்கும் முகமில்லாத நபர்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை" என்று எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். இப்பதிலின் நடுவே ‘மானே தேனே’போடுவதற்கு பதில் மகா மட்டமான கெட்டவார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.