Two Two Two song glimpse : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இப்படத்தின் போது தான் நடிகை நயன்தாரவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல மலர்ந்தது. அவர்கள் அதன் நினைவாக தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளனர். இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், ஊர்க்குருவி, வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தயாராகி வருகின்றன.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ரேம்போ என்கிற ரோலில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாரா கண்மணியாகவும், நடிகை சமந்தா கத்திஜாவாகவும் நடித்துள்ளனர். மேலும் டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் இப்படம் மூலம் நடிகர்களாக அறிமுகமாக உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று இப்படத்தில் இடம்பெறும் டூடூடூ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாராவுடன் இணைந்து விஜய்சேதுபதி குத்தாட்டம் போட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Suriya : ஜல்லிக்கட்டு காளையுடன் வலம் வந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா - வைரலாகும் மாஸ் வீடியோ

YouTube video player