Suriya : தமிழ் புத்தாண்டு தினமான இன்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். கமர்ஷியல் ஹிட் அடித்த இப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி கலக்கி வருகிறது.
இதையடுத்து பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.

இதுதவிர வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் சூர்யா. வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. மேற்கண்ட இரண்டு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில் ஜல்லிக்கட்டு காளையுடன் நடந்து வரும் சூர்யா, என தமிழ் எனச் சொல்லி அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் வாடிவாசல் படத்துக்கு தயாராகி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Actor vishal : மதம் மாறினாரா விஷால்?... சர்ச்சையை கிளப்பிய டுவிட்டர் பதிவு
