Actor vishal : விஷாலின் டுவிட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், அவர் மதம் மாறிவிட்டாரா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி திரைப்படம் தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஷால் போலீஸாக நடித்துள்ளார். இதையடுத்து மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க உள்ளார் விஷால். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்கிற தங்கை உள்ளார். இவருக்கும் கிரிஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விஷால்.

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: மீண்டும் மாமா ஆனதில் மிக்க மகிழ்ச்சி. இதுக்கு மேல என்ன வேணும்?. எனது தங்கை ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், பெற்றோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்” என பதிவிட்டுள்ளார்.

விஷாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், அவர் மதம் மாறிவிட்டாரா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஏனெனில் அந்த டுவிட்டில் அவர் இன்ஷா அல்லாஹ் எனக் குறிப்பிட்டிருந்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். மதம் மாறியது உண்மையா? இல்லையா? என்பதை விஷால் விளக்கினால் தான் இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... KGF 3: மூன்றாம் பாகம் உருவாகும்... சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கிய KGF படக்குழு