Dippam Dappam Song: "காத்துவாக்குல ரெண்டு காதல்'' திரைப்படத்தில் இடம்பெற்ற சமந்தா - விஜய் சேதுபதியின் டூயட் பாடலான  ''டிப்பம் டப்பம்'' என்ற பாடல் இன்று மாலை 7:30 மணியளவில் வெளியாகியுள்ளது.  

''காத்துவாக்குல ரெண்டு காதல்'' திரைப்படத்தில் இடம்பெற்ற சமந்தா - விஜய் சேதுபதியின் டூயட் பாடலான ''டிப்பம் டப்பம்'' என்ற பாடல் இன்று மாலை 7:30 மணியளவில் வெளியாகியுள்ளது. 

காத்து வாக்குல ரெண்டு காதல்:

நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். 

நட்சத்திர பட்டாளங்கள்:

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உருவாகியுள்ளது. இதில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

ஏப்ரல் 28-ம் தேதி ரீலீஸ்:

இந்த திரைப்படம் வரும், ஏப்ரல் 28-ம் தேதி திரையிரங்குகளில் வெளியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வெளியீட்டிற்காக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

படத்தின் முக்கிய அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இசையமைப்பாளர் அனிரூத் மட்டும் நடித்திருந்த டூடூடூ பாடல் செம ஹிட் அடித்ததை அடுத்து நாயகன் நாயகிகள் உள்ள வீடியோ சாங் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது.

 இதையடுத்து, அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில், ரவி திரிபாதி ஆகியோர் பாடிய நான்பிழை என்னும் மெலோடி பாடல் வெளியானது. பாடலில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவும் தோன்றியிருந்தனர்.

சமந்தா - விஜய் சேதுபதியின் 'Dippam Dappam'' டூயட் பாடல்:

இந்நிலையில்,"காத்துவாக்குல ரெண்டு காதல்'' திரைப்படத்தில் இடம்பெற்ற சமந்தா - விஜய் சேதுபதியின் டூயட் பாடலான ''டிப்பம் டப்பம்'' என்ற பாடல் இன்று மாலை 7:30 மணியளவில் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் படிக்க....உன் சைஸுக்கு உன்னால் எப்படி மாடலாக முடியும்..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி தந்த கல்யாணி பிரியதர்ஷினி..!

YouTube video player