தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா சமீபத்தில் நடித்த நடந்த விருது விழாவில்  'ராட்சசி' திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். இந்த விருது விழாவில் ஜோதிகா பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில், பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. 

எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார். 

மேலும் செய்திகள்: டிராபிக் போலீசுக்கு இதை செய்யணும்னு யாருக்காவது தோணுச்சா? கலக்கும் யோகி பாபு! குவியும் வாழ்த்து!
 

இந்த பேச்சு ஒரு சில நெட்டிசன்களால் திரிக்கப்பட்டு, ஜோதிகா தஞ்சை கோவிலுக்கு எதிரான கருத்தை கூறியதாக அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

இதற்க்கு, வெளியான பல்வேறு விமர்சனங்கள் ஜோதிகாவை வேதனை பட வைத்தது. ஒரு தரப்பினர் ஜோதிகாவுக்கு ஆதரவாக கருத்துகள் வெளியிட்டு வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் செய்திகள்: ஜோதிகாவுக்கு ஆதரவா? முழுக்க முழுக்க பொய்..! அலறி அடித்துக்கொண்டு பதில் கொடுத்த விஜய் சேதுபதி!
 

இந்த நிலையில் ஜோதிகா குறிப்பிட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு எதிரே உள்ள மருத்துவமனையின் நிலை உண்மையில் இப்படி உள்ளது. அதில் உரிய வசதிகள் உள்ளதா இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும். ஒரு வேலை அவர் சொல்வது உண்மை எனில், அவர் சுட்டி காட்டிய மருத்துவ மனைக்கு உரிய உதவிகளை செய்திட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோதிகாவின் பேச்சை சர்ச்சையாக்கியது ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது அந்த பேச்சால் தான் இந்த மருத்துவமனைக்கு விடிவு காலமும் வரப்போகிறது என சூர்யாவின் ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகிறார்கள்.