நடிகர் யோகி பாபு, இதுவரை யாரும் செய்திடாத உதவியை டிராபிக் போலீசுக்கு  செய்து அசத்தி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பவர், காமெடி நடிகர் யோகி பாபு.

இந்நிலையில் இவர் ஏற்கனவே, வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் பெப்சி தொழிலாளர்களுக்கு. பல மூட்டை அரிசியை கொடுத்து உதவிய நிலையில், அதை தொடர்ந்து நலிந்த நடிகர் சங்க கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உணவு மற்றும் மளிகை பொருட்களை கொடுத்து உதவினார். 

இதையும் படியுங்க: ஜோதிகாவுக்கு ஆதரவா? முழுக்க முழுக்க பொய்..! அலறி அடித்துக்கொண்டு பதில் கொடுத்த விஜய் சேதுபதி!
 

மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், தமிழக மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தை கட்டு படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக பல போலீசார், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என, இரவு பகல் பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

குறிப்பாக போலீசார், கோடை வெயிலில் நின்று பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உணவு, மாஸ்க் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டாலும், கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள  N95 பாதுகாப்பு மாஸ்க் கொடுக்கடுப்புகிறதா என்றால் அது சந்தேகமே.

இதையும் படியுங்க: சூர்யா படத்திற்கு ரெட் கார்டு? ஜோதிகா சர்ச்சையில் லாபம் பார்க்க நினைத்ததால் வந்த புது பிரச்சனை!
 

இந்நிலையில், மக்களுக்காக பணியாற்றி வரும் டிராபிக் போலீசாருக்கு உதவும் நோக்கத்தில், நடிகர் யோகி பாபு, அவர்களுக்கு தேவையான  N95 சேஃப்ட்டி மாஸ்க், மற்றும் எனர்ஜி ட்ரிங்க் போன்றவற்றை கொடுத்து வழங்கியுள்ளார். இதுவரை பல்வேறு உதவிகளை செய்து வருபவர்களுக்கு கூட, இப்படி ஒரு யோசனை தோணாத நிலையில் இவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.