திருமணத்திற்கு பின் '36 வயதினிலே' படத்தின் மூலம்  ரீ-என்ட்ரி கொடுத்தது முதல், தரமான படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் நடிகை ஜோதிகா. இவர் நடிப்பில் அடுத்ததாக 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இவருடைய கணவர் சூர்யா, 2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்துள்ளார். 

இந்த படத்தை, தற்போது ஓடிடி பிளாட் பாமில் வெளியிட சூர்யா முடிவிடுத்து விட்டதாகவும்,  ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் 9 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. ஆனால் சூர்யா தரப்பில் இருந்து இதுவரை எந்த வித அதிகார பூர்வா தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கோவில்களைப் பற்றி பேசிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள் ஆனால் பள்ளிக்கூடம், மருத்துவமனையும் முக்கியமான ஒன்று தான். கோவில் உண்டியலில் காசு போடுவதை விட அதற்கு உதவுங்கள் என்று அந்த விழாவில் பேசியிருந்தார். இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கண்டனங்கள் வலுத்துவருகிறது. 

மேலும் செய்திகள்: சூர்யா படத்திற்கு ரெட் கார்டு? ஜோதிகா சர்ச்சையில் லாபம் பார்க்க நினைத்ததால் வந்த புது பிரச்சனை!
 

ஜோதிகாவிற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்த நிலையில், அவருக்கு எதிராக பல  திரைத்துறை பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி... ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய்யான தகவல் ஒன்று உலா வந்தது.

மேலும் செய்திகள்: முதலில் கீர்த்தி சுரேஷ் இதை செய்வாரா? தந்தை வைத்த ஒற்றை கோரிக்கைக்கு குவியும் ஆதரவு!
 

அதில், ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு பாராட்டுக்கள் என்றும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன்.  மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் கடவுளால் வேடிக்கை பார்க்கத் தான் முடியும் என்றும் கோவில்கள் விரைவில் மருத்துவமனையாக மாற்றும் காலம் நெருங்கி விட்டது என்றும்  விஜய்சேதுபதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது போல் யாரோ ஒரு மர்ம நபர் போட்டோ ஷாப்பில் விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கு போலவே உருவாக்கி இந்த தகவலை பரப்பி விட்டார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் விஜய் சேதுபதி, ஜோதிகாவுக்கு ஆதரவாக நான் எந்த தகவலையும் வெளியிட வில்லை என்பதை கூறும் விதமாக, இப்படி பரவி வரும் தகவல் முழுக்க முழுக்க பொய் என தெரிவித்துள்ளார்.