ஜூலி பிந்துவிடம் நீங்கள் பாதியில் தான் உள்ளே வந்தீர்கள், ஒரு வார்த்தை ஜூலி வெளியில் உனக்கு நல்ல பெயர் இல்லை என கூறி இருந்தால் நான் கொஞ்சம் சூதானமாக இருந்திருப்பேன். ஏன் கூற வில்லை என்பது போல் கேட்கிறார்.

இதனை கேட்டதும் பிந்து மாதவி வெளியே சென்றதும் இதனை எப்படி எடுத்துக்கொண்டீர்கள் என கேள்வி எழுப்பினார், இதற்கு ஜூலி இப்படி பட்ட தருணத்தை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்றும் என்மீது சர்ச்சைகள் வருவது பற்றி எல்லாம் நான் கவலை பட்டதே இல்லை, ஆனால் பலர் எழுதிய விமர்சனங்களை தான் படிக்க முடியவில்லை மிகவும் மோசமாக இருந்தது என கூறினார்.

பின் பிந்து இது குறித்து மக்களுக்கு நீங்கள் ஏதாவது அறிக்கை கொடுத்தீர்களா அல்ல இதுகுறித்து பேச முயற்சி செய்தீர்களா? என கேட்க, ஜூலி இது குறித்து நான் பேசி இந்த பிரச்னையை மேலும் தீவிரப்படுத்த விரும்ப வில்லை என்றும், நான் என்ன காரணம் சொன்னாலும் மக்கள் அதனை கேட்கும் சூழலில் இல்லை என்றும் தெரிவித்தார். 

இதனை அறிந்து தன்னுடைய பெற்றோர் தான் மிகவும் வருத்தப்பட்டார்கள், ஆனால் அவர்கள் என்னை பார்த்ததும் சரியாகிவிட்டனர், ஆனால் மக்கள் தான் தன்னை தீவிரவாதி போல் பார்த்தார்கள். பலர் தன்னை பார்த்து இன்னும் நீ சாகலையா..? செத்துப்போய் இருப்பனு நினைத்தோம் என்று கூட கூறினார்கள் என வருத்தத்துடன் பிந்துவிடம் கூறிய ஜூலி... நான் இங்கு வரும்போது எவ்வளவு கைதட்டல்கள் இருந்ததோ... நான் போகும்போது ஒரு கைதட்டல்கள் கூட இல்லை நீ இங்கிருந்து போய்விடு என்பது போல் தான் மக்கள் நினைத்தார்கள் என தன் மனதில் இருந்த ஆதங்கத்தை பிந்துவிடம் கொட்டி தீர்த்தார்.