julie put the condition to give interview
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீரத் தமிழச்சி என்று கலந்துகொண்ட ஜூலி, கடைசியில் வேதனையோடுதான் திரும்பினார். தற்போது வரை எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வருகிறார். ஆனால் இவரை வைத்தே பல தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் கல்லா கட்டும் டெக்னிக்கை ஆரம்பித்துள்ளன.

இதை நன்கு புரிந்து கொண்டுள்ள ஜூலி, தான் எவ்வளவு கேவலப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை... உங்களுக்கு பேட்டி தருகிறேன். ஆனால் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கறாராகக் கூறி வாங்கி விடுகிறாராம்.

இந்தத் தகவலை ஜூலியின் நெருங்கிய நட்பு வட்டமே சொல்லி வருகிறது. மேலும் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவோ அல்லது சீரியல் நடிகையாகவோ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் இவருக்கு பல படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்!
